திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அன்புமணி வலியுறுத்திருப்பது தொடர்பாக...

PMK President Dr. Anbumani Ramadoss

பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்

Published On :

காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உழவ்ர்கள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் நெல் மூட்டைகளும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பாசன மாவட்டங்களில் 3 லட்சம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால், நெல்லை அறுவடை செய்த உழவர்கள் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது, கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதது உள்ளிட்டவை தான் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

கொள்முதல் நிலையங்களில் சேரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கும், அரவை நிலையங்களுக்கும் கொண்டு செல்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களைப் போலவே நடப்பாண்டிலும் போதிய கிடங்கு வசதிகள் இல்லாததும், நெல் மூட்டைகள் உடனுக்குடன் அகற்றப்படாததும் நெல் கொள்முதலை பாதித்திருக்கிறது.

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அடுக்கி வைக்கும் பணிகளில் ஈடுபடும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவாக இருப்பதால், போதிய எண்ணிக்கையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 30% சுமை தூக்கும் தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதால் ஒவ்வொரு நாளும் 900 முதல் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுவதற்கு பதிலாக, 300 முதல் 400 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை இப்போது தான் தொடங்கியிருக்கிறது. அடுத்து வரும் நாள்களில் அறுவடை தீவிரமடையும் போது கொள்முதல் நிலையங்களில் இன்னும் பல மடங்கு நெல் மூட்டைகள் தேங்கும் நிலை உருவாகும். இந்த நிலைமையை மாற்ற கிடங்குகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

The government must take immediate steps to ensure that the paddy bags brought by farmers to procurement centres are procured without delay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.