
செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசு
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

விடுமுறை - கோப்புப்படம்
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு செப். 26 முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றுடனும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையுடனும் காலாண்டுத் தேர்வுகள் முடிவடையவுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தி, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு பள்ளியின் தலைமையாசிரியர்தான் முழுப் பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Quarterly holidays from Sept. 26! Ban on special classes! Tamil Nadu Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





