
தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த எதிரொலியாக தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளையே(செப். 25) சம்பளம் வரவுவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 5 நாள்கள் வேலை போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் 90% பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாள்களான செப். 26, 27 ஆகியவை வார இறுதி (சனி, ஞாயிறு) விடுமுறை நாள்களாகும். இதனால் தொடா்ந்து 5 நாள்கள் வங்கிகள் மூடப்பட்டால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதனால், பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க, செப். 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளை திறக்க பாரத ரிசா்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் செப். 25-ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே நாளை(செப்.25) வழங்கப்படும் என்று தமிழக நிதித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள்களும் ஏடிஎம், கைப்பேசி செயலி மூலம் நடைபெறும் வங்கிச் சேவை, இணையவழி வங்கிச் சேவை, யுபிஐ போன்ற எண்ம சேவைகள் தடையின்றி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
It has been announced that the salaries of Tamil Nadu government employees will be credited tomorrow (Sept. 25) due to the bank employees' strike.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






