ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

தோற்றாலும் ஜெயித்தாலும் ஸ்டாலின் எனக்கு ஸ்வீட் அங்கிள்! முதல்வர் விஜய்

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேசியது பற்றி...

C Joseph vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - YT | TVK

Published On :

திமுகவின் கிளையாக அதிமுக மாறிவிட்டதாக முதல்வர் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:

"மதுராந்தகத்துக்கு முதல்வராக வரவில்லை. பிரசாரத்துக்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்துள்ளேன். உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா? லஞ்சத்தை ஒழிக்க, பெண்கள் பாதுகாப்புக்காக உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

திமுக நம்மை பற்றி நாள்தோறும் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறைமுகமாக அதிமுக உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கிறார்கள். திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போதே அவர்கள் முகமுடி கிழிந்துவிட்டது.

நீங்கள் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுபவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை. திமுகவுக்கு வாக்களித்தால் பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு ஆதரவளிப்பதற்கு சமம்.

அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. சாமானியர்களுடன் விஜய் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டார்கள் என்பதற்காக தடுக்கிறார்கள்.

ஊழலின் ஊற்றுக்கண் திமுக எனக் கூறினால், அப்போது நான் பிறக்கவே இல்லை என்கிறார்கள். நான் எப்போது பிறந்தால் உங்களுக்கு என்ன? ஊழல் என்றால் ஆதாரத்தை காட்ட சொல்கிறார்கள். காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் என்கிறார்கள். ஏன், எதற்கு கத்துறாங்கனு ஒன்னும் புரியவில்லை. நான் குழம்பிவிட்டேன். பேசு பேசு என்கிறார்கள், பேசினால் பேச விடாமல் இருக்க கத்துகிறார்கள்.

ஸ்டாலினுக்கும் திமுகவுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஊழல் செய்தவர்களை விடவே மாட்டோம். மக்கள் பணத்தை தொட்டதில்லை, தொட மாட்டோம் என உங்களால் சொல்ல முடியுமா?

ஸ்டாலின் பாவம், தேர்தலில் தோற்றுவிட்டார், எதிர்க்கட்சித் தலைவராககூட இல்லை என்கிறார்கள், அவர் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு ஸ்வீட் அங்கிள்” என்றார்.

Summary

cm vijay speech in Maduranthakam by-election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER