
தண்ணீர், ஸ்நாக்ஸ், குளிர்பானம்... முதல்வர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் காரசார ஏற்பாடுகள்!
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் முன்னேற்பாடுகள் குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் முதல்வர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக ஆத்தூா் சுங்கச்சாவடி அருகே 5,000 போ் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 3 மணியளவில் முதல்வர் விஜய் பிரசாரத்தைத் தொடங்கும்நிலையில், பிராசாரத்தில் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 50 ஏக்கர் அளவில் தவெக பொதுக்கூட்ட அரங்கு அமைக்கப்பட்டு, 5,000 பேர் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரங்கினுள் செல்வதற்கு இரு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, உள்ளே வலது மற்றும் இடது புறங்களில் தலா 7 பிரிவுகள் என 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 400 முதல் 450 பேர் வரையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்காக ஒவ்வொரு இருக்கையிலும் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், குளிர்பானம், நிலக்கடலை ஆகிய உணவுப்பொருள்கள் அடங்கிய பைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய்யின் பேச்சைக் கேட்கவும் காணவும் ஏதுவாக ஒவ்வொரு பிரிவிலும் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. அரங்கின் இருபுறத்திலும் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரங்கின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரசாரத்தில் அவசர உதவிக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் பிரசாரத்தையொட்டி சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Arrangements for the TVK campaign in Maduranthakam attended by CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



