தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

ஜெம் வீரமணி வழக்கு: வெறும் அறிக்கையுடன் மு.க. ஸ்டாலின் கடந்துவிட முடியாது! - பெ. சண்முகம்

ஜெம் வீரமணி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து...

 CPI(M) State Secretary Shanmugam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் . - ANI

Published On :

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில் அழுத்தம் கொடுத்தது யார்? என்றும் மு.க. ஸ்டாலின் வெறும் அறிக்கையுடன் இதனைக் கடந்துவிட முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஏன் மேல் விசாரணை செய்யப்படவில்லை? விடியோ தெளிவாக இல்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்துவைக்க முடியுமா? அப்படியென்றால் அந்த வழக்கில் அழுத்தம் கொடுத்தது யார்? காரணமான அதிகாரிகள் யார்? என்பதற்கு அவர் அறிக்கையில் எந்த பதிலும் இல்லை.

2024 நவம்பர் மாதமே இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். பின்னர் 2025ல் ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்று கூறி திமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கை முடிக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் மு.க. ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பதுபோல இதை கடந்து சென்றுவிட முடியாது. தன்னுடைய ஆட்சி காலத்தில் வலைப்பின்னல் போல இப்படி ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததற்கு தார்மீக முறையில் பதில் சொல்வதே நேர்மையாக இருக்கும்.

'என்னுடைய ஆட்சி காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தாததற்கு நான் பொறுப்பேற்கிறேன். அதற்கு காரணமான அதிகாரிகளால் இந்த பிரச்னை என் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு வரப்படவில்லை' என்ற முறையில்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர, 'எங்களுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை' என்று கடந்து போவதால் இந்த பிரச்னையை மூடி மறைத்துவிட முடியாது.

அதிமுக, திமுக ஆட்சியில் அந்தந்த காலகட்டத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து இதை மூடி மறைத்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய் பணம் கைமாறப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மற்ற வழக்குகளைப் போல இது கிடப்பில் இருந்துவிடக் கூடாது.

ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு வெளிக்கொண்டு வந்ததாக சொல்வது தவறு. இந்த வழக்கை தவெக அரசு முடிக்கப் பார்த்தது. கடந்த ஆக. 19 ஆம் தேதி வழக்கு விசாரணையில், வழக்கு முடித்துவைப்பதாகவே தவெக அரசும் அறிக்கை அளித்துள்ளது.

ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்டதால்தான், பயந்து இதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தவெக அரசு தள்ளபட்டுள்ளது" என்றார்.

Summary

Gem Veeramani Case: M.K. Stalin cannot simply move on with just a statement: P. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.