ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

ஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது குறித்து...

GEM Veeramani

வீரமணி - கோப்புப் படம்

Published On :

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் பல முக்கிய பெரும்புள்ளிகள் சிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

4 பேர் கொண்ட இந்தக் குழு முற்றிலும் பெண் அதிகாரிகள் கொண்ட குழுவாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், சென்னை காவல் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏடிஜிபி அருண், ஐஜிபி கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Special Investigation Team formed in Gem Veeramani sexual offense case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER