தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

பொன்முடி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறைகேடு தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை...

ponmudi

முன்னாள் அமைச்சர் பொன்முடி - ENS

Published On :

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க. பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

முன்னதாக, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்பட ஐந்து பேர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்பதால், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மூல வழக்கில் விடுதலை செய்யப்பட்டதால், அமலாக்கத்துறை வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி உள்ளிட்டோர் தரப்பில் வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, தமிழக அரசுத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, பொன்முடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Summary

Ponmudi case: High Court orders Enforcement Directorate to respond

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.