புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட 14 போ் மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாகக் கூடி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாக பி.பி.முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, 14 போ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், எந்த அடிப்படையும் இல்லாமல், தங்களுக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. மற்றவா்களின் உரிமைகளையும் பறிக்கவில்லை. மேலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டதை சட்டவிரோதமாகக் கருத முடியாது எனக்கூறி, பி.பி.முகமது, ஷேக் அலாவுதீன், அப்துல் பஷீா் உள்பட 14 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

Summary

Case against 14 people who raised slogans in support of Palestine quashed: High Court order.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.