வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

Ilaiyaraaja

இளையராஜா - DIN

Published On :

நீதிமன்ற உத்தரவை மீறி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து தங்களது பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாகவும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தில்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் மனு அளித்துள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் காப்புரிமை இருக்கும் படங்களின் பாடல்களுக்கும் இளையராஜா உரிமை கோருவதாகவும், அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதாகவும் சரிகம நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

"1976 - 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையைப் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்து பெற்றுள்ளது. ஆகையால், தங்கள் நிறுவனத்தின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோரவும், பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிடுமாறு” மனுவில் குறிப்பிட்டது.

இந்த வழக்கில் சரிகம காப்புரிமை வைத்திருக்கும் படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாகப் பயன்படுத்தவும், பிறருக்கு காப்புரிமை வழங்கவும் இடைக்காலத் தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இளையராஜாவின் மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறியும் இளையராஜா, தொடர்ந்து தங்களது பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாகவும் தடையை மீறும் இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்க வேண்டும் என்று சரிகம நிறுவனம் மனு அளித்துள்ளது.

இந்த மனு மீது இளையராஜா பதிலளிக்க வேண்டும் என அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Summary

Contempt of Court Case: Delhi High Court Issues Notice to Ilaiyaraaja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER