போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தில்லி மாணவர் போராட்டம்! ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு!

தில்லி போராட்டம் தொடர்பான விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது பற்றி...

Supreme court

உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

தில்லி மாணவர் போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத் தாள் கசிவு மற்றும் பல்வேறு தோ்வுகளில் நிகழ்ந்த முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தியது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி மழைக் கால கூட்டத் தொடரின் தொடக்க நாளில், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரா்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தின்போது பெல்லட் குண்டுகள் மூலம் மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அவை,

  1. நீட் மற்றும் பிற தேர்வு வினாத்தாள் கசிவுகள் தொடர்பான போராட்டங்களில் எழும் காவல்துறையின் வரம்பு மீறிய செயல்கள், காவலர்கள் மீதான வன்முறை, பெண் போராட்டக்காரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் படைபலப் பிரயோகம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்னைகளையும் ஆராய, உச்ச நீதிமன்றம் ஒரு உயர் அதிகாரக் குழுவை அமைக்க உள்ளது. இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்காமல், அவசரப் பிரச்னைகள் குறித்து இந்தக் குழு இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.

  2. மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய சட்டப்பிரிவின் 142-வது பிரிவைப் பயன்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம். அதே சமயம் கடுமையான குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தனியாகக் கையாளலாம்.

  3. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் டிஜிபி அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்படும்.

  4. அவசரப் பிரச்சினைகளை உடனடியாகக் கையாளவும், தேவைப்படும் இடங்களில் துறைசார் நிபுணர்களை ஈடுபடுத்தவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

Summary

Delhi student protest - Inquiry committee headed by a retired Supreme Court judge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.