பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

வராத மின்சாரத்துக்கு விளக்கங்கள் மட்டும் இரண்டு: செந்தில் பாலாஜி

கல்லூரி நிகழ்ச்சியில் மின்வெட்டு குறித்து மின்சாரத் துறை அமைச்சரும் மின்வாரியமும் வெவ்வேறு பதிலளிப்பதாக செந்தில் பாலாஜி கூறியது குறித்து...

Senthil Balaji | Nirmal Kumar

செந்தில் பாலாஜி | - கோப்புப் படம்

Published On :

மதுரையில் அரசுக் கல்லூரி நிகழ்ச்சியில் மின்வெட்டு குறித்து மின்சாரத் துறை அமைச்சரும் மின்வாரியமும் வெவ்வேறு பதிலளிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, "மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில்தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது.

விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார். மின்வாரியத்தின் தரப்பிலோ மின்தடை என கூறப்பட்டது. வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டாக வருகிறது.

ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?

இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. மின்வாரியத்தின் பதிவு எப்படி போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்" என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலத்தில் சமீபமாக அதிகளவில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், மின்சாரத் துறை அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாகவும், மின்தடை ஏற்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மின்தடை ஏற்படவில்லை என மின்வாரியமும் விளக்கம் அளித்தது.

Summary

Two explanations, but no electricity: DMK MLA Senthil Balaji accused Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.