மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

பிரதமராகும் தகுதியும் திறமையும் விஜய்க்கு இருக்கிறதா? நயினார் நாகேந்திரன் கேள்வி

பிரதமராகும் தகுதியும் திறமையும் தவெகவினருக்கு இருக்கிறதா என நயினார் நாகேந்திரன் விமர்சித்தது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

பிரதமராகும் தகுதியும் திறமையும் தவெகவினருக்கு இருக்கிறதா என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "முதல்வர் விஜய் பிரதமராவதாகக் கூறி போஸ்டர் ஒட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸாரே அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

உலகளவில் இன்று இந்தியா மதிப்பைப் பெற்றிருக்கிறதென்றால், அதற்கென தனித் திறமை, முயற்சி, ஈடுபாடு வேண்டும். அதற்குக் காரணம், 13 ஆண்டுகளாக முதல்வராகப் பணியாற்றி, தற்போது 12 ஆண்டுகளையும் தாண்டி பிரதமராக இருக்கும் பிரதமர் மோடிதான்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்போ ரஷிய அதிபர் புதினோ இரு பெரிய தலைவர்களையும் சென்னை மகாபலிபுரம் கடற்கரைக்குக் கூட்டி வந்து மிகப்பெரிய சாதனை படைத்தவர்தான் பிரதமர் மோடி. அத்தகைய பொறுப்பு முன்னாள் பிரதமர்களுக்கும் இருந்தது. ஆனால், யாரும் செய்யவில்லை.

தவெகவினர் தெரிந்தோ தெரியாமலோ தமிழகத்தில் 107 இடங்களில் வெற்றி பெற்று விட்டனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான தகுதியும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியை தவெகவினர் நிறைவேற்றினர்? மகளிருக்கு ரூ. 2,500 கொடுப்பதாய்ச் சொன்னார்கள். இதுவரையில் கொடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதாய்ச் சொன்னார்கள்; அதுவுமில்லை. இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் தவெகவினரே ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட கொலைகள், கஞ்சா புழக்கம் அதிகரிப்பு என மோசமான நிலைக்கு ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.

முதல்வர் தெளிவாக இருப்பதாகவே தெரியவில்லை. தில்லியில் திமுக இருப்பதாய்க் கூறுகிறார். தில்லியில் எங்கே திமுக இருக்கிறது? தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. எங்களுக்கு எப்போதுமே திமுக எதிரிதான். திமுகவை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. 1999-க்குப் பிறகு திமுகவுடன் பாஜக கூட்டணி சேரவில்லை. ஒரு விஷயத்தை தெளிவாகப் பேச வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

சட்டப்பேரவையில் சினிமா வசனங்களைப் பேசும் முதல்வர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை, தமிழ்நாடும் எந்த நிலைமைக்குச் செல்லப் போகிறது என்றும் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

Summary

BJP Chief Nainar Nagenthran questions whether TVK Vijay has the qualifications and capability to become Prime Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.