தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதா? தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை தவெகவினர் ஈடுபடுத்துவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Published On :

இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை தவெகவினர் ஈடுபடுத்துவது கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், குழந்தைகளை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்கு தெரியாதா முதல்வர் விஜய்?

தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் “Zero Tolerance” கொள்கையை மதிக்காமல், மதுராந்தகம் தொகுதியில் பள்ளி மாணவர்களின் கைகளில் தவெக கொடிகளைத் திணித்து, இடைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் அவர்களை ஈடுபடுத்திய தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது “சாக்லேட் வேண்டும் என அடம் பிடிப்பது போல தவெகவிற்கு ஓட்டுப் போடச் சொல்லி பெற்றோர்களிடம் அடம் பிடியுங்கள்” என்று நீங்கள் மறைமுகமாக குழந்தைகளை குறி வைத்ததன் நீட்சி தான், இன்று உங்கள் கட்சிக்காரர்கள் அதே குழந்தைகளை நேரடியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உங்கள் பதவி வெறிக்காக படிக்கும் பிள்ளைகளை இப்படி பரப்புரையாளர்களாக உபயோகப்படுத்துவது அருவருக்கத்தக்க அரசியல் உத்தி.

தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை உபயோகித்தால் சிறைத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும், குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் (2016 திருத்தம்)- இன் படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக கட்சிக்காரர்கள் மற்றும் அதை அனுமதித்த ஜோசப் விஜய் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Tamil Nadu BJP State President Nainar Nagendran has stated that the involvement of children in the by-election campaign by TVK members is condemnable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.