
நடிகர், நடிகைகள் பின்னால் தமிழக மக்கள் சென்றார்கள் என்ற அவப்பெயர் ஏற்படும்! நயினார்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து...
முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும், இல்லையென்றால் தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேவை மாதம் அனுசரிக்கப்பட்டு, அதன்படி ஏழை, எளிய மக்களுக்கும் பள்ளி அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை பெருமாள்புரம் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை பாஜக சார்பில் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தினை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகம் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இடைத்தேர்தலில் அதிகமான பணம் செலவழிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் இடைத்தேர்தல் தேவையற்றது. தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து அரசு சொல்லி வருகிறது. 3,000 மெகாவாட் வரக்கூடிய இடத்தில் 10 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வருவதாக அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.
வரும் இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும். மாற்றம் வந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்று அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும். தமிழக சட்டமன்றம் மோசமான சூழலுக்கு சென்று விட்டது. பால் விலை உயர்வு ஏற்பட்டுவிட்டது. கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்னை ஏற்படும். மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஆனால் தட்டுப்பாடு இல்லாமல் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சி, மதச்சார்பற்ற ஆட்சி என தமிழக வெற்றி கழகம் சொல்லி வருகிறது. பேரவைத்தலைவர் முதல் முதல்வர் வரை ஒரு தலைப்பட்சமாக பேசி வருகின்றனர். மதச்சார்பற்ற ஆட்சி என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறேன். பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களை நான்தான் நியமனம் செய்ய முடியும். கூட்டணியில் உள்ள நட்சத்திரப் பேச்சாளர்களை நான் நியமனம் செய்ய முடியாது. அப்படி கூட்டணியில் உள்ளவர்களை நியமித்தால், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? நாங்கள் யாருக்கும் பின்னணியில் இல்லை.
பட்டினப்பாக்கத்தில் உள்ள இடத்தின் அளவு எவ்வளவு என்பதே தெரியாமல், அதிகாரி, பொறியாளர் என யார் என்றே தெரியாமல் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். மத்தியில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சொல்லும் கட்சியின் இன்றைய நிலைமையையும், அப்போது இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுக இப்போது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ‘சி.எம். 2031’ என்ற நம்பர் பிளேட் கொண்ட திருமாவளவன் காரில் உள்ளதை நம்பர் பிளேட்டாக மட்டுமே பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
Summary
BJP state president Nainar Nagendran on TN byelection
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






