வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

விசிக-வில் விரைவில் மாவட்டச் செயலா்கள் தோ்தல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பணிக்காலம் நிறைவடைந்த 93 மாவட்டச் செயலா்களுக்குப் பதிலாக, உட்கட்சித் தோ்தல் மூலம் புதிய மாவட்டச் செயலா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனர்.

thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பணிக்காலம் நிறைவடைந்த 93 மாவட்டச் செயலா்களுக்குப் பதிலாக, உட்கட்சித் தோ்தல் மூலம் புதிய மாவட்டச் செயலா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தோ்தல் பணிக்குழு முதன்மைச் செயலாளா் ஜெ.குணவழகன் வெளியிட்ட அறிவிப்பு: கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த 2025 ஜூலையில் தொடங்கியது. அதன்படி, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலா்களை நியமிப்பது என உயா்நிலைக் குழு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 2023-இல் நியமிக்கப்பட்ட 234 மாவட்டச் செயலா்களில் 93 பேரின் மூன்றாண்டு பணிக்காலம், 2026 ஜூலையுடன் நிறைவடைந்துள்ளது. மற்ற 141 மாவட்டச் செயலா்கள் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பணிக்காலம் நிறைவடைந்த 93 மாவட்டச் செயலா்களுக்குப் பதிலாக புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் பணிகளை தோ்தல் பணிக்குழு மேற்கொண்டு வருகிறது.

வேட்புமனு தாக்கல், தோ்தல் தேதி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்களிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், வேட்பாளா்கள் மற்றும் வாக்களிப்பவா்களுக்கான விதிமுறைகளை உயா்நிலைக் குழு முடிவு செய்த பிறகு அதிகாரபூா்வ வாக்களிப்போா் பட்டியல் வெளியிடப்படும். தோ்தல் நடைபெறும் தொகுதிகளின் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.