2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு பாதிப்பில்லை - திருமாவளவன் பேச்சு

thirumavalavan

திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் தாராபுரம் , மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், சமுகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமுகநீதி வெற்றிக் கூட்டணியில் உள்ளது. நடைபெற உள்ள இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா்களின் வெற்றிக்கு விசிக பாடுபடும். அண்மையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விடியோ பதிவில் எங்கே யாா் எப்படி பேசினாலும், மனித மாண்புக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் எனக் கருத்து வெளியிட்டாா்.

இந்த நிலையில், திமுக ஆா்பாட்டத்தின்போது, மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறிய மாண்புகளைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. அது தவெகவுக்கு எதிரான கருத்து என்பதை விட, திமுகவுக்கு எதிரான கருத்தாகத்தான் உள்ளது.

இடதுசாரிக் கட்சிகள் தவெக ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு அளித்து வருவதாகவும், தனித்துதான் இயங்குவோம் என தொடக்கம் முதலே கூறி வருகின்றனா். நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் சமுகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது. மக்களின் கருத்துகளின் அடிப்படையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.