கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

தீபாவளி திருநாள்: விண்ணைத் தொடும் பட்டாசு விலை! எவ்வளவு தெரியுமா?

பட்டாசு விலை உயர்வு குறித்து...

Firecracker prices rise

பட்டாசு விலை உயர்வு - பிரதிப் படம்

Published On :

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்ததால் பட்டாசுகளின் விலை உயர்த்தப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகித அளவுக்கு சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 10 சதவிகிதம் தமிழகத்திலும், 90 சதவிகிதம் வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு தீபாவளி திருநாள் சமயத்தில், தமிழகத்தில் ரூ. 450 கோடிக்கும், நாடு முழுவதும் ரூ. 6,000 கோடிக்கும் பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது.

இந்தாண்டில் நவம்பர் 8 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தாண்டு பட்டாசு உற்பத்தியில் சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்காசிய நாடுகளின் போர் காரணமாக பட்டாசு மூலப்பொருள்களின் விலை உயர்வு, உற்பத்தி ஆலைகளில் தொடர் வெடி விபத்து காரணமாக உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளுக்குத் தாமதமாக வழங்கப்பட்ட அனுமதி உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவானதையடுத்து, பட்டாசுகளின் விலை 25 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Summary

Firecracker prices rise in Sivakasi due to reduced production

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.