பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

திமுகவுக்கு ஆதரவளித்து அதிமுகவுக்கு குழிதோண்டும் இபிஎஸ்: நிர்மல் குமார்

திமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தது குறித்து...

Edappadi Palaniswami | Nirmal Kumar

எடப்பாடி பழனிசாமி | நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :

திமுகவுக்கு ஆதரவாகப் பேசி, அதிமுகவை குழிதோண்டி எடப்பாடி பழனிசாமி புதைக்க முயற்சிப்பதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் நன்றாக ஆட்சி செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். சமீபமாக திமுகவுக்கும் சேர்த்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவர் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா அல்லது திமுகவுக்காக வாக்கு சேகரிக்கிறாரா என்பதே தெரியவில்லை.

திமுகவுக்காக அவர் பேசி வருகிறார். அதே சமயம், அதிமுக எம்எல்ஏ-க்கள் ஏன் ராஜிநாமா செய்கின்றனர் என்றும் அவர் கேட்கிறார். திமுகவுக்காக பேசும் உங்களை நம்பி எப்படி அதிமுகவினர் பயணிக்க முடியும்?

திமுகவுக்காகவும் மு.க. ஸ்டாலினுக்காகவும் நீங்கள் பேசும்போதும், உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு நீங்கள் முயற்சிக்கும்போதும் உங்களுடன் அதிமுகவினர் பயணிப்பார்களா?

அதிமுகவின் தூண்களாக இருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று அக்கட்சியைவிட்டு வெளியேறியதற்கான முக்கிய காரணம், திமுகவுக்கு ஆதரவாகப் பேசுவதுதான்.

அதிமுகவை குழிதோண்டி புதைக்காமல் அவர் (இபிஎஸ்) விடமாட்டார். அது எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்கிற மிகப்பெரிய துரோகம். அதிமுகவை மூட்டை கட்டி, பரணில் வைக்காமல் அவர் விடமாட்டார்" என்று தெரிவித்தார்.

Summary

Minister Nirmal Kumar criticizes ADMK Secretary Edappadi Palaniswami for speaking in support of the DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.