தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

வரும் தேர்தல்களில் திமுக - அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம்! நிர்மல் குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு...

Minister Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:03 pm IST

பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது, காலம் இருக்கிறது. தவெக - காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். அதனால் துறைரீதியாக ஒரு முடிவெடுக்கும்போது அனைத்து மாவட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்தும் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்.

இது ஏழை, எளிய மக்களுக்கான அரசு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியான நேரத்தில் நாங்கள் செய்வோம்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் நடைபெறும் ரெய்டு எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுகிறது.

வரும் தேர்தல்களில் திமுக - அதிமுக - பாஜக எல்லாம் சேர்ந்து கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு எல்லாம் இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தாலும் தவெகவை எதுவும் செய்ய முடியாது" என்றார்.

Summary

DMK, AIADMK, BJP might form an alliance and contest the upcoming elections: Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.