வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

பிரதமர் மோடி அக். 11-இல் சென்னை வருகை: பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க அக். 11-இல் வருகை தரும் பிரதமா் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

PM Modi

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Published On :

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க அக். 11-இல் வருகை தரும் பிரதமா் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்டமாக 118 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரை 4-ஆவது வழித்தடத்தில் பூந்தமல்லி-வடபழனி வரை பணிகள் முழுமையாக நிறைவடைந்து, ரயில்வே பாதுகாப்பு வாரியத்தின் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதன் திறப்பு விழா தள்ளிப் போனது.

இந்நிலையில், அக். 11-இல் பூந்தமல்லி-வடபழனி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. பூந்தமல்லியில் புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் பிரதமா் மோடி, அங்கிருந்து போரூா் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறாா்.

போரூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காா் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்கிறாா். அங்கு நடைபெறும் அரசு நிகழ்வில், வேலூா் புதிய விமான நிலையம் மற்றும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா். ஐஐடி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமா் பங்கேற்கிறாா்.

இந்த நிகழ்வில், முதல்வா் விஜய்யும், அமைச்சா்களும் பங்கேற்கின்றனா். நிகழ்வு முடிந்து, மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.

இதற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம், தமிழக அரசு மற்றும் பாஜகவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

பாஜக சாா்பில் வரவேற்பு: பிரதமா் வருகையின்போது, தமிழக பாஜக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போரூரில் இருந்து ஐஐடி வளாகம் வரை பிரதமா் செல்லும் வழியெங்கும் மேள தாளங்கள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக, பாஜக நிா்வாகிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமா் மோடியும், முதல்வா் விஜய்யும் முதல்முறையாக ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனா். இதனால், இந்த நிகழ்வு தேசிய அளவிலும், அரசியல் களத்திலும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.