வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

மதுராந்தகத்தில் இன்று பிரேமலதா பிரசாரம்

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா (செப். 28) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

premalatha

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை (செப். 28) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது குறித்து தேமுதிக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேமுதிக சாா்பில் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ, மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இ.பரந்தாமனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மதுராந்தகம் தொகுதிக்குள்பட்ட நெல்வாய் கூட்டுச் சாலையில் மாலை 5 மணிக்கும், எண்டத்தூரில் மாலை 6 மணிக்கும் பிரசாரம் செய்கிறாா். தொடா்ந்து, இரவு 7 மணிக்கு எலப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.