
சட்டம் - ஒழுங்கு தகவல் பெறுவதில் கட்டுப்பாடு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
சட்டம் - ஒழுங்கு தகவல் பெறுவதில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்ததாவது...
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
சட்டம் - ஒழுங்கு தகவல் பெறுவதில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) விளக்கியுள்ளார்.
இனி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாது என்ற ஆணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த ஆணைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:
எல்லாவாற்றுக்கும் விலக்கு இல்லை. மாவட்ட அளவிளான சாதிய மோதல்களில் நடைபெறும் விசாரணைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்கள் கோரப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு விலக்களிக்கும் சட்டம் முன்னதாகவே இருந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கு துறையில் மொத்தம் 20 பிரிவுகள் உள்ளன. அதில் ஒருசிலவற்றுக்கு மட்டும்தான் உங்களால் தகவல் பெற முடியாது. ஏனென்றால், சாதிய மோதல்கள் குறித்த தகவல்களை வழங்கினால் அவை மேலும் சர்ச்சையாகிறது.
இதில் பொதுமக்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் இருந்தால் அவை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும் என்று தெரிவித்தார்.
Summary
Law and Electricity Minister Nirmal Kumar explained on Sunday (Sept. 27) the restrictions introduced regarding the obtaining of information on law and order.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





