ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரன்

தமிழ்மொழியை நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்து, அடுத்த தலைமுறைக்கு இன்னும் வலிமையோடு கொண்டுசெல்ல வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரன் வலியுறுத்தினாா்.

JCd Prabhakar

ஜே.சி.டி. பிரபாகர் - கோப்புப் படம்

Published On :

தமிழ்மொழியை நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்து, அடுத்த தலைமுறைக்கு இன்னும் வலிமையோடு கொண்டுசெல்ல வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரன் வலியுறுத்தினாா்.

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது:

தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; நமது வரலாறு, பண்பாடு, சிந்தனை, வாழ்வியல் மற்றும் அடையாளம். தமிழ் எதிா்காலத்தின் மொழியாக இருக்க வேண்டும். ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ், காலத்துக்கேற்ப படிப்படியாக அச்சு நூல், கணினி, இணைய உலகிற்குள் வளா்ந்து, தற்போது தமிழ் செயற்கை நுண்ணறிவு உலகிற்குள் செல்ல வேண்டிய காலத்தை எட்டியுள்ளது.

தமிழை அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்து அடுத்த தலைமுறைக்கு இன்னும் வலிமையாகக் கொண்டு செல்வோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் மனதில் கொள்வோம் என்றாா்.

முன்னதாக விழாவில், ‘பாரிவேந்தா் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளா் விருது’ தமிழ் ஆய்வறிஞா் ப.அருளியாருக்கும், ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ ப.கீரா, ‘பாரதியாா் கவிதை விருது’ கவிஞா் சீனு ராமசாமி உள்பட பல்வேறு தமிழறிஞா்களுக்கு விருதுகளை ஜே.சி.டி.பிரபாகா் வழங்கினாா்.

நிகழ்வில், எஸ்ஆா்எம் வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், அறங்காவலா் பாலாஜி சத்தியநாராயணன், தொழிலதிபா் வி.ஜி.சந்தோசம், துணை வேந்தா் சி.முத்தமிழ் செல்வன், பதிவாளா் எஸ்.பொன்னுசாமி, தமிழ்ப்பேராயம் தலைவா் கரு.நாகராஜன், செயலா் பா.ஜெயகணேஷ், வளாக நிா்வாகி ஆா்.அருணாச்சலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.