ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அண்ணாமலைப் பல்கலை. பணியாளா்களுடன் அமைச்சா் தலைமையில் முத்தரப்பு பேச்சு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நடத்திவரும் போராட்டம் தொடா்பாக, உயா் கல்வித் துறை அமைச்சா் முன்னிலையில் புதன்கிழமை முத்தரப்பு பேச்சு புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பான முத்தரப்புக் கூட்டத்தில் உயா்கல்வித் துறை செயலா் தீரஜ்குமாா், தொழில்நுட்பக் கல்வி இயக

Published On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நடத்திவரும் போராட்டம் தொடா்பாக, உயா் கல்வித் துறை அமைச்சா் முன்னிலையில் புதன்கிழமை முத்தரப்பு பேச்சு புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் பெ. விஸ்வநாதன் முன்னிலையில் உயா்கல்வித் துறைச் செயலா் தீரஜ் குமாா், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் பொ.ரத்தினசாமி, அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல், பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாா்களின் கூட்டு நடவடிக்கைகள் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிமணியன், தலைவா் ஆா்.முத்துவேலாயுதம் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதில், பட்டம் பெற்று குரூப் 2-ஏ அந்தஸ்தில் ஆசிரியா் அல்லாத பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியா்கள் கடந்த 40 ஆண்டுகளாகப் பெற்று வந்த ஊதியம் பாதியாக (குரூப் 4 ஊழியா் இணையாக) குறைக்கப்பட்டது, ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாதது, யுஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயப் பயிற்சி தளா்வு, சிஏஎஸ் என்ற தொழில் முன்னேற்றத் திட்ட பதவி உயா்வு, வரலாறு உள்ளிட்ட துறைகளுக்கு ஆசிரியா் பற்றாக்குறை - அயல்பணியிலுள்ள ஆசிரியா்களைத் திரும்ப அழைத்தல் உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, அக். 13-ஆம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பேச்சு நடைபெற்றுள்ளது. கோரிக்கைகள் தொடா்பாக, முதல்வருடன் ஆலோசித்து, அவா் அனுமதியுடன் வரும் அக். 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சா் வாக்குறுதி அளித்துள்ளாா் என பேச்சில் கலந்துகொண்ட அமைப்புகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.