கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி பெüர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கும்பகோணத்தில் புனிதக் குளமாக போற்றப்படும் மகாமகக் குளத்தில் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமன்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக தினத்தன்றும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்தர் குளத்தை பௌர்ணமி தினத்தில் தீர்த்த வலம் வந்தால் சாந்தம், அமைதி நிலவி, பகைமை அகன்று, சுபிட்சம் மலரும் என்பதால் சேக்கிழார் மன்றத்தின் சார்பில் தீர்த்த வலம் வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு மகாமக குளத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீர்த்த வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையேற்று சிவபுராணத்தை பாடி வழிநடத்தினார். இதில் சேக்கிழார் மன்ற நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன், தீபிகாசெல்வராஜ், ராமகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், முனைவர் செல்வசேகரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மகாமகக் குளத்தை 3 முறை வலம் வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

அதிமுகவில் நடக்கும் முக்கிய பிரச்னை! திருமாவளவன் பேட்டி | ADMK | VCK
அழிவில் அதிமுக! கண்ணீருடன் விடைபெறுகிறேன்! எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


