அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

விநாயகர் சிலைகளைக் கரைக்கும் இடங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது (செப்.9) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:12 pm IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது (செப்.9) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டிய இடங்களை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது:

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் அவை கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்மைக் காலமாக ரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது.

எனவே, சிலைளை இயற்கைப் பொருள்களைக் கொண்டே செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்டவை, சுடப்படாதவை மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு ரசாயன வர்ணம் பூசுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். தண்ணீரில் கரையும் தன்மையுடைய மற்றும் எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணக் கலவைகளையே பயன்படுத்த வேண்டும். தீங்கு விளைவிக்கும், தண்ணீரில் கரையாத வண்ணங்களை அடியோடு தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல் கடலில் குறைந்தது 0.5 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் சென்று கரைக்க வேண்டும்.

தஞ்சாவூரில் வடவாறு, கல்லணைக் கால்வாயிலும், திருவையாறு, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் காவிரியாற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய பகுதிகளில் வீரசோழன் ஆற்றிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலோரப் பகுதிகளில் கடலிலும் கரைக்க வேண்டும்.

இந்த இடங்களில் காவல் துறையின் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும். அதுவும் ரசாயன வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.