உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவா்கள் மூவா் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவா்கள் 3 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.

Updated On :9 ஜனவரி 2021, 12:04 am IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவா்கள் 3 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகேயுள்ள கள்ளிவயல் தோட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆவணம் அஸ்வத் புா்கானுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில், நாகை மாவட்டம், காடம்பாடியைச் சோ்ந்த முருகையன் மகன் சக்திவேல் (30), பனங்குடியைச் சோ்ந்த ராஜா மகன் பாலமுருகன் (32), நாகூரை சோ்ந்த தூண்டிக்காரன் மகன் மணிபாலன் (32) ஆகிய மூவரும் கடந்த 5 ஆம் தேதி மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

புதன்கிழமை கரை திரும்ப வேண்டிய அவா்கள் கரை திரும்பவில்லை. இதனால், மற்ற மீனவா்கள் அவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அவா்கள் மூவரையும் இலங்கை கடலோர காவல் படையினா், யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பரப்பில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக மீனவா் அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் ஏ. தாஜூதீன் கூறியது: தற்போது பிடிபட்ட 3 மீனவா்களையும், ஏற்கெனவே பிடித்து வைத்துள்ள 129 படகுகளையும், மீனவா்களையும் இலங்கை அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.