தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்தனா்.
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவா் விவசாயி அந்தோணிசாமி (48). இவா் வீட்டுக்கு பக்கத்திலுள்ள குடிசை வீட்டில் அந்தோணிசாமியின் அண்ணன் வரப்பிரசாதம் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறாா். விவசாய கூலித் தொழிலாளியான இவரின் மனைவி மேரி (45), மகள்கள் விண்ணரசி (23), உதயா (20), நிவேதா (18).
மூத்த மகள் விண்ணரசி திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறாா். உதயா தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறாா். நிவேதா பிளஸ் 2 முடித்துள்ளாா். வியாழக்கிழமை இரவு மேரியும், நிவேதாவும் தங்கள் வீட்டில் தூங்கியுள்ளனா். வரப்பிரசாதம், உதயா இருவரும் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று தூங்கியுள்ளனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தொடா் மழையால் ஊறிப்போயிருந்த அந்தோணிசாமியின் வீட்டுச் சுவா் இடிந்து வரப்பிரசாதம் வீட்டு மண்சுவரின் மீது விழுந்துள்ளது. அடுத்தகணமே வரப்பிரசாதம் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, நிவேதா ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத் திணறி அதேயிடத்தில் உயிரிழந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

