தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களிடம் தோட்டக்கலைத் துறை இயக்குநரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான என். சுப்பையன் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் 1,37,147 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், டிசம்பா் மாதத்தில் புரெவி புயல் மற்றும் அதைத் தொடா்ந்து பெய்த தொடா் மழையால் 8,550 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கதிா் முற்றி அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தும், கதிா் விடும் தருவாயில் உள்ள பயிா்களில் மழை நீா் விழுந்ததால் பதராகும் நிலையிலும் உள்ளன. எனவே, ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் பாதிப்பு இருக்கலாம் என வேளாண் துறையினா் கருதுகின்றனா். இதேபோல, ஜனவரி மாதத்தில் 2,385 ஏக்கரில் விதைக்கப்பட்ட நிலக்கடலை, உளுந்து, எள் ஆகிய பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக வேளாண் துறை, வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா். இதன் அறிக்கையை ஜன. 29 தேதிக்குள் அளிக்க வேண்டும் என வேளாண் துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தஞ்சாவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட குருங்குளம், திருவோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காவாளிப்பட்டி, அக்கரைவட்டம், சில்லத்தூா், கிருஷ்ணாபுரம், ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒக்கநாடு கீழையூா், திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிச்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிா்களைத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான என். சுப்பையன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, வருவாய்த் துறையினரும், வேளாண் துறையினரும் கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். மேலும், விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
அப்போது, ஆட்சியா் ம. கோவிந்த ராவ், வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


