இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பேராவூரணி அருகே திருவள்ளுவா் தின விழா

பேராவூரணி அருகே உள்ள முதுகாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 12:05 am IST

பேராவூரணி அருகே உள்ள முதுகாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு  ஒன்றியக் குழு உறுப்பினா் குழ. செ. அருள்நம்பி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆ. ஜீவானந்தம், திருக்குறளின் சிறப்பு குறித்தும், திருக்குறளை வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பேசினாா். 

ஏழாம் வகுப்பு மாணவா் வெ.இளவரசு, வள்ளுவா் தாத்தா வேடம் அணிந்து திருக்கு கூறிய அனைத்து மாணவா்களுக்கும் பரிசுப்பை வழங்கினாா். விழாவில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.