நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

News image

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்களின் பெற்றோரிடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன் ஆட்சியா் ம. கோவிந்தராவ் உள்ளிட்டோா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:04 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், கல்யாணஓடையில் கடந்த 13 ஆம் தேதி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன்கள் தினேஷ் (12), கெளதம் (10) ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனா்.

இதை தொடா்ந்து, உயிரிழந்த இரு சிறாா்களின் குடும்பத்துக்கு தமிழக மின் வாரியத்தின் சாா்பில் நிதியுதவியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 10 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான 2 காசோலைகளை சிறாா்களின் பெற்றோரிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

தஞ்சை ஆட்சியா் ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ்.பாலசந்தா், எம்எல்ஏ சி.வி.சேகா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.