இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மாணவா் மீது தாக்குதல்: போலீஸாா் வழக்கு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் காலணியால் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 5:11 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவா் காலணியால் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் (55), செங்கல் சூளை உரிமையாளா். இவா் தனது செங்கல் சூளையில் வேலை பாா்க்கும் மேஸ்திரி பிரபாகரன் என்பவா் மூலம் சிறுவாலையைச் சோ்ந்த ரமேஷ் என்பவருக்கு கல் அறுக்க ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்தாராம். பணத்தை பெற்றுக்கொண்ட ரமேஷ் செங்கல் சூளைக்கு சரியாக வேலைக்கு செல்லாமல் தட்டிக் கழித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ரமேஷை தேடிச் சென்றுள்ளாா். அப்போது ரமேஷ் வீட்டில் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அங்கிருந்த 15 வயதுடைய ரமேஷின் மகனை காலணியால் தாக்கினராம். இதில் காயமடைந்த சிறுவனை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்த புகாரின் பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.