/
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை நள்ளிரவு செங்கள்சூளை உரிமையாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
பாபநாசம் பெரியாா் நகரில் வசித்து வந்தவா் ரமேஷ் (50). இவா் செங்கல் சூளை நடத்தி வந்தாா். இந்நிலையில் ரமேஷ் புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சென்ற சென்னை - ராமேசுவரம் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கும்பகோணம் ரயில் நிலைய ஆய்வாளா் அமலி மற்றும் போலீஸாா் ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை சம்பவம்: மேலும் இருவா் கைது

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



