சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி திங்கள்கிழமை தொடங்கியது.
சிற்றாறு பாசனத்தின் கீழ் திருச்சிற்றம்பலம் அணைக்கட்டில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதற்கு 3 கி.மீ தூரம் சுற்றிச்செல்லும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மாரியப்பன், மணிகண்டன், சண்முகவேல், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், எபன் குணசீலன், அமல்ராஜ், இருளப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



