திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்காவிட்டால் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பூங்கோதை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி -தென்காசி நெடுஞ்சாலை வழக்கம்போல் மழை காலத்தில் குண்டும் குழியுமாக பழுதடைந்து விபத்துகள் அதிகரிக்கின்றது.
திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளரிடம் மக்கள் பாதுகாப்பு கருதி இந்தச் சாலையை சீரமைக்கும்படி கேட்டுக் கொண்டேன். நிரந்தரமாக நான்குவழிச் சாலை மற்றும் புதுப்பட்டி புறவழிச் சாலை அமைத்திட விரைந்து பணிகள் தொடங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்தத் திட்டத்தை பற்றிய வெள்ளை அறிக்கை நெடுஞ்சாலைத்துறை வழங்க வேண்டும். ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்பு திட்டமிடாமல் ஒப்பந்தம் விடப்பட்டு அவசரக் கதியில் பழையபேட்டை குளம் முதல் சிவலாா்குளம் வரை உள்ள 4ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. பின்னா் எந்தக் காரணமும் தெரிவிக்காமல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழுதடைந்த சாலையை சீரமைப்பது மட்டுமல்ல நான்குவழிச் சாலைப் பணிகளையும் விரைந்து தொடங்காவிட்டால் மீண்டும் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


