தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளைவை தாண்டி கொட்டியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
முற்பகலில் தண்ணீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து பேரருவியின் மையப் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். விடுமுறை தினம் என்பதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








