பாவூா்சத்திரம் ரயில் நிலைய 122 ஆவது ஆண்டு விழா
கடந்த 1903 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மீட்டா் கேஜ் பாதையாக தொடங்கப்பட்ட பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 122 ஆவது ஆண்டு விழா, பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாவூா்சத்திரம் தொழிலதிபா் சேவியர்ராஜன் தலைமை வகித்தாா். தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன், ஜேசு ஜெகன், பாவூா்சத்திரம் அரிமா சங்கத் தலைவா் ஆனந்த், பொருளாளா் ஜேக்கப் சுமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பாண்டியராஜா நன்றி கூறினாா்.

