தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:31 pm

Din

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சி, வீரத் தமிழா் முன்னணி, தமிழ் தேசிய பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. நாம் தமிழா் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலா்கள் தங்கவேல், பசும்பொன்,

வீரத் தமிழா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் முருகேசன், மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சத்யா, தமிழ் தேசிய பேரியக்க மதுரை மாநகர செயலா் கதிா்நிலவன், இந்து மறுமலா்ச்சி இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.