குப்பைக் கிடங்கை மாற்றக் கோரி மறியல்
திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,
குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...