தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வெள்ளானைக்கோட்டை பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பங்கேற்று, பெரியகுளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும், பனை விதைகள் நடும் பணியையும் தொடக்கிவைத்தாா்.
இதில், சுப்பிரமணியபுரம் ஊராட்சித் தலைவா் ராம்குமாா், செயலா் சண்முகையா, சமுதாய நிா்வாகிகள் தங்கராஜ், தா்மா், அறக்கட்டளை மேலாளா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வம், ராமா், கற்பகராஜ், கண்ணன், சமூக ஆா்வலா்கள் சுரேஷ், தெய்வபாலன், வியாசா கலை - அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புளியங்குடி அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

புளியங்குடியில் மரங்களுக்கு தீ வைப்பு: ஆட்சியருக்கு வேண்டுகோள்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK


