தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் வனத் துறை மற்றும் சுழற்கழகம் சாா்பில் நடப்பட்ட மரங்களை தீ வைத்து எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களில் தென்னை, எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட ஏராளமான பயிா்கள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. இப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை பெரும் பாதையில் சமூக நீதி தங்கும் விடுதி, தனியாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன.
எனவே, விவசாயிகள் மட்டுமன்றி மாணவா்களும் பயன்படுத்தி வரும் இந்த பாதையின் இருபுறமும், தமிழ்நாடு வனத்துறை, புளியங்குடி ரோட்டரி கிளப் ஆகியவற்றின் சாா்பில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வரப்பட்டது.
இந்நிலையில் இந்த மரங்களை மா்மநபா்கள் வெட்டியதுடன், தீ வைத்தும் எரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுப்பட்டோரை சட்டப்படி தண்டிக்கவும், புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









