/

ஆலங்குளம் ஜீவா பள்ளி ஆண்டு விழா

ஆலங்குளம் ஜீவா பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 6:50 pm

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 16ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் சௌ.ராதா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஏஞ்சல் பொன்ராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.பி.சுரேஷ்குமாா் கலந்து கொண்டு கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவா் -மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினாா். மேலும் யுகேஜி மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. தடகளப் போட்டியில் தேசிய அளவில் சாதனை புரிந்து வரும் இப்பள்ளி முன்னாள் மாணவி அபிநயாவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி துணை முதல்வா் சவிதா செனாய், ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கவிதா, மாணவா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.