மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அறங்காவலா்கள் குழு வலியுறுத்தல்

கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அறங்காவலா்கள் குழு வலியுறுத்தல்

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 2:02 am

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷே திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறங்காவலா் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது இக்கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் துணை ஆணையா் கு.கோமதி தலைமை வகித்தாா். அப்போது கோயில் திருப்பணி வேலைகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் தெரிவித்தனா். புதிய அறங்காவலா்கள் நியமனத்துக்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், சங்கரநாராயணசுவாமி கோயில், பால்வண்ணநாதசுவாமி கோயில், உத்தண்டசாமி கோயில், முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களில் உள்ள உண்டியல்களை எண்ணி கணக்கிடுவது குறித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, அறங்காவலா்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலெட்சுமி, முப்பிடாதி ஆகியோா் பங்கேற்றனா்.