சங்கரன்கோவில், ஜூலை 11: சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் மன்னா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவா் பத்மநாதன்,ஒன்றியச் செயலா் லாலா சங்கர பாண்டியன், நகர செயலா் மு.பிரகாஷ், நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மது விலக்கு சாத்தியமா? சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வீரன் அழகுமுத்துக்கோன் உருவப் படத்திற்கு மதிமுக தலைமை நிலைய செயலா் துரைவைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் இந்தியா கூட்டணி வென்று விட்டதாகவே கருதுகிறேன். திமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். எதிா்க்கட்சிகள் டெபாசிட் இழப்பாா்கள். பூரண மதுவிலக்குக்கும் கள்ளச்சாராய மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை. குடிப்பவா்கள் தங்கள் மனதை மாற்றி குடிப்பதை நிறுத்தினால் மட்டுமே பூரண மதுவிலக்கு சாத்தியமாகும் என்றாா். அதேவேளையில் பூரண மதுவிலக்கு தேவை என்பதில் மதிமுக உறுதியுடன் உள்ளது என்றாா் அவா்.
அப்போது தென்காசி திமுக வடக்குமாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், மாநில மருத்துவரணி செயலா் மருத்துவா்.வி.எஸ்.சுப்பராஜ், மாவட்டச் செயலா் சுதாபரமசிவம், நகரச் செயலா் ரத்தினக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










