செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்
Published on

தென்காசி, ஜூலை 19: தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்

வெள்ளிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

இலத்தூா், கட்டளைகுடியிருப்பு, கற்குடி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு,

குடிநீா் வசதி, சாலை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவொற்றியூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்

காலை உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.

செங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையைப் பாா்வையிட்ட அவா், நகராட்சிப் பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

செங்கோட்டை வட்டாட்சியா் மணிகண்டன், செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகேசன், ராதாதிருமலை மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com