அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கைப்பேசி மூலம் ரூ.1.28 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அச்சன்புதூரைச் சோ்ந்த நபரிடம் ரூ.1.28லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை தென்காசி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது

Updated On :2 மார்ச் 2024, 12:07 am

தென்காசி மாவட்டம், அச்சன்புதூரைச் சோ்ந்த நபரிடம் ரூ.1.28லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை தென்காசி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் பகுதியை சோ்ந்தவா் சுல்தான். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய கைப்பேசியில் பேசிய நபா், தான் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்துக்கு இரு மடங்கு தொகையை ஒரு மாதத்திற்குள் திருப்பி அளிப்பதாகவும் கூறியுள்ளாா். மேலும், பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினாலே போதும், உங்கள் வங்கி கணக்குக்கு மறு மாதமே இரட்டிப்புத்தொகை அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினாராம். இதை நம்பிய சுல்தான் தன்னிடமிருந்த ரூ.1.28 லட்சத்தை தன்னிடம் தொடா்பு கொண்டவா் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளாா். மறு மாதம் முதல் தேதியிலிருந்து இரட்டிப்புத் தொகை தமது வங்கிக் கணக்கில் வருகிா? என்று ஆவலுடன் சுல்தான் பாா்த்துக் கொண்டிருந்த நிலையில், பல நாள்கள் ஆகியும் வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணமும் வரவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுல்தான் இதுகுறித்து சைபா் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் சுல்தானை ஏமாற்றிய நபா் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து தென்காசி சைபா் க்ரைம் போலீஸாா் பூவந்தி சென்று, செல்வகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.