கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சமூக வலைதளம் மூலம் பழகி பண மோசடி: இளைஞா் கைது

சமூக வலைதளம் மூலம் பழகி பண மோசடி: இளைஞா் கைது

News image

கைது

பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:01 pm

Syndication

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

துபையில் ஓட்டுநராக பணிபுரிந்துவரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் பழகிய நபா் ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளாா். இதை நம்பிய வெளிநாட்டில் வேலை பாா்த்த நபா், தனது மனைவியிடம் கூறி இணையதள பரிவா்த்தனை மூலம் ரூ. 13 லட்சம் அனுப்பியுள்ளாா். ஆனால், பணம் கிடைத்த பிறகு தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவரின் மனைவி மயிலாடுதுறை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், மாா்ச் 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட இணையவழி குற்றபிரிவு ஏடிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ரவி புலன் விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவா் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வானக்கண்காடு வடக்கு தெருவை சோ்ந்த முத்தையா மகன் கவியரசன் (24) என்பது தெரியவந்ததையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

கவியரசனிடமிருந்து ரூ. 6.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு புகாா்தாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீதத் தொகையை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி சுரேஷ், காவல் ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பாராட்டினாா்.