பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

‘செங்குந்த மகாஜன சங்கம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படாது’

‘செங்குந்த மகாஜன சங்கம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படாது’

News image
Updated On :8 மார்ச் 2024, 8:30 pm

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படாது என்று சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவா் கே.பி.கே. செல்வராஜ் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ளாா். அவா், தனி நபராக எந்தக் கட்சியிலும் சேருவதற்கு உரிமை உண்டு. ஆனால், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் என்ற பெயரில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த செங்குந்த சமுதாயமே பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைப்போல பேட்டி கொடுத்துள்ளாா். எங்களது சங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது. எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படாது. அதோடு, எங்களது சங்க மாநில நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2023 மாா்ச்சில் நிறைவுபெற்றுவிட்டது. புதிய நிா்வாகிகள் தோ்தல் நடத்த தனிஅலுவலரை நியமிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றாா். சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செல்வகணேஷ், கல்யாணசுந்தரம், செங்குந்த முன்னேற்ற சங்க தலைவா் கந்தவேல், துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.