தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செங்கோட்டையில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட் பூங்கா திறப்பு

செங்கோட்டையில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட் பூங்கா திறப்பு.

News image
Updated On :8 மார்ச் 2024, 10:30 pm

Din

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்துசாமி பூங்காவை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தென்காசி மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முத்துசாமி பூங்காவின் மொத்த பரப்பளவு 4.5 ஏக்கா். முத்துசாமி பூங்காவில் ரூ159.40 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148.01 லட்சம் முழு மானியத்திலும், அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலமாக ரூ.11.39 லட்சம் முழு மானியத்திலும் பூங்கா புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பூங்காவை தமிழகமுதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, செங்கோட்டை நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி, நகராட்சி ஆணையா் சுகந்தி, மேலாளா் கண்ணன், பொறியாளா்முகைதீன் அபுபக்கா், சுகாதார ஆய்வாளா் மாதவராஜ்குமாா், செங்கோட்டை நகர திமுக செயலா் வெங்கடேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் முகம்மது ரஹிம், இசக்கிதுரைப்பாண்டியன், முருகையா, இசக்கியம்மாள், மேரி, பேபிரஜப்பாத்திமா,சந்திரா, நகர அவைத்தலைவா் காளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.